விருதுநகரில் தொடரும் சோகம்…மீண்டும் பட்டாசு ஆலை விபத்து: ஆலையில் உரிமையாளர் உள்பட 3 பேர் பலி..!!
Author: Aarthi Sivakumar5 January 2022, 9:52 am
விருதுநகர்: சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2022 ஜனவரி 1 புத்தாண்டு தினத்தன்று விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியை அடுத்துள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் வழிவிடுமுருகன் என்பவருக்குச் சொந்தமான, சென்னை உரிமம் பெற்ற RKVM பட்டாசு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழப்பு 5 ஆக அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் சோகம் மறைவதற்குள் இன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை அருகே மஞ்சள் ஓடைப்பட்டியில் உள்ள சோலை என்ற பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்டுப்பணியில் இறங்கியுள்ளனர்.
கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தொழிலாளர்கள் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் ரசாயனப்பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
வெடிவிபத்து ஏற்பட்ட ஆலையிலிருந்து மீட்கப்பட்ட 7 பேருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சேர்க்கப்பட்ட எழுவரில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் கருப்பசாமி மற்றும் ஊழியர்கள் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
0
0