ஆழ்துளை கிணறு அமைப்பதில் தகராறு…3 பேர் வெட்டிகொலை: 5 பேர் படுகாயம்…நெல்லையில் அதிர்ச்சி..!!

Author: Rajesh
17 April 2022, 6:05 pm
Quick Share

நெல்லை: நெல்லை அருகே ஆழ்குழாய் கிணறு அமைப்பது சம்பந்தமாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் பெண் உட்பட 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை அருகே உள்ள மானூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட நாஞ்சான்குளம் கிராமத்தில் நிலத்தகராறு மற்றும் ஆழ்குழாய் கிணறு அமைப்பது சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் பெண்கள் உள்பட 3 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த 5 பேரையும் போலீசார் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படும் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Views: - 529

0

0