ஆற்றில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் : நீரில் அடித்துச் செல்லப்பட்ட சோகம்!!

Author: Udayachandran
7 October 2020, 10:52 am
Tirupur 3 Dead - updatenews360
Quick Share

திருப்பூர் : பல்லடம் பொங்கலூர் பி.ஏ.பி வாய்க்காலில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதையடுத்து சடலத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த புள்ளியப்பம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்னபூரணி. இவரது கணவர் இறந்த நிலையில் தனது இரண்டு மகள்கள் சரண்யா (வயது 12), தேவி (வயது 19) ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், மூத்த மகளான தேவிக்கு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு சேதுபதி (வயது 24) என்பவருடன் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில் அனைவரும் பொங்கலூர் பி.ஏ.பி வாய்க்காலுக்கு குளிக்க சென்றுள்ளனர். அன்னபூரணி கரையில் இருந்த நிலையில் சரண்யா, தேவி இருவரும் நீரில் இறங்கு குளித்து கொண்டிருந்தனர். அப்பொழுது சரண்யா தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற சென்ற தேவியும் சேதுபதியும் அடுத்தடுத்து நீரில் அடித்து செல்லப்பட்டனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அன்னபூரணி அருகில் இருந்தவர்களுக்கு தகவல் அளித்தார்.அதனை தொடர்ந்து காமநாயக்கன் பாளையம் போலீசார் மற்றும் பல்லடம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவல் கிடைத்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் டி.எஸ்.பி ஸ்ரீராமச்சந்திரன் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வாய்க்கால் நீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 42

0

0