கோவையில் 3 மாத கைக்குழந்தை கொடூர கொலை: தப்பியோடிய பாட்டிக்கு போலீசார் வலைவீச்சு…!!
Author: Aarthi Sivakumar22 October 2021, 11:43 am
கோவை: 3 மாத ஆண் குழுந்தையை கொன்று விட்டு, 3 மாத பெண் குழந்தையை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பிச் சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை கவுண்டம்பாளையம் சேரன் நகரை சேர்நதவர் பாஸ்கரன். பொறியாளரான இவருக்கு ஐஸ்வர்யா என்ற மனைவியும், ஆண்-பெண் என இரட்டை குழந்தைகள் உள்ளனர்.
இருவரும் மூன்று மாத கைக்குழந்தைகளாக இருந்தனர். இந்நிலையில், குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக மதுரையில் இருந்து ஐஸ்வரியாவின் தாயார் சாவித்திரி பாஸ்கரன் வீட்டிற்கு வந்து கடந்த 2 மாதமாக தங்கியுள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு திடீரென சாவித்ரி ஆண் குழந்தையை கொலை செய்துவிட்டு, பெண்குழந்தையை கொடூரமாக தாக்கி காயப்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
பேரனை கொன்று விட்டு தப்பிய பெண்ணை துடியலூர் போலிசார் தேடி வருகின்றனர். இந்த கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பேரக்குழந்தையை பாட்டியே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
0
1