சட்டப்பேரவையில் மேலும் 3 தலைவர்களின் திருவுருப்படங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி..!!

23 February 2021, 8:04 pm
assembly photo - updatenews360
Quick Share

சென்னை : சட்டப்பேரவை வளாகத்தில் வ.உ.சிதம்பரனார் உள்பட 3 தலைவர்களின் திருவுருவப் படங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் திருவள்ளுவர், பெரியார், காமராஜர் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் என மொத்தம் 12 தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மேலும் 3 தலைவர்களின் படங்கள் சட்டப்பேரவையில் வைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, இன்று நடந்த நிகழ்ச்சியில் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரனார், பி.சுப்பராயன், முன்னாள் முதல்வர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் முழு உருவ படங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்த 3 படங்களும் சட்டசபை மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளன.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்த இந்த நிகழ்ச்சியில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். புதிதாக திறக்கப்பட்ட 3 படங்களையும் சேர்த்து தமிழக சட்டசபையில் வைக்கப்பட்ட தலைவர்களின் படங்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.

Views: - 0

0

0

Leave a Reply