விடிய விடிய மது அருந்தி தீபாவளியை கொண்டாடிய 3 பேர் திடீர் பலி : மதுபாட்டில்களை கைப்பற்றி போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 November 2021, 7:12 pm
Alcohol Dead -Updatenews360
Quick Share

கோவை : பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தீபாவளி கொண்டாட விடிய விடிய மதுபானம் அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பாப்பாநாய்க்கன் பாளையம் பகுதியில் பெயின்டர் வேலை பார்க்கும் சக்திவேல், பார்த்திபன், முருகானந்தம் ஆகிய 3 பேர் இன்று தீபாவளியை முன்னிட்டு நேற்று இரவு மது அருந்தியுள்ளனர்.

இரவு முழுதும் மது குடித்த அவர்கள் காலையில் 6.30 மணிக்கு பிளாக்கில் மீண்டும் மதுபானம் வாங்கி குடித்த நிலையில் அடுத்தடுத்து மயங்கி சாலையில் விழுந்தனர்.
மயங்கியவர்களின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. உடல்கள் பிரேதப்பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

பாதி அருந்திய நிலையில் கைப்பற்றபட்ட மதுபான பாட்டில்களை கைப்பற்றிய பந்தய சாலை காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 297

0

0