ஐயோ, மீண்டும்… மீண்டுமா..? வழிப்பறியில் ஈடுபட திட்டம் தீட்டியவர்களை கொத்தாக தூக்கிய போலீசார்.. குருவி சுடும் துப்பாக்கி பறிமுதல்!

Author: Babu Lakshmanan
13 February 2023, 10:56 am
Quick Share

கோவை : கோவை அருகே வழிப்பறியில் ஈடுபட முயன்ற மூவரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து குருவி சுடும் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

கோவை லங்கா கார்னர் பகுதியில் 3 நபர்கள் நின்று கொண்டிருந்தனர். ரோந்து போலீசார் அவ்வழியாக வந்த பொழுது அவர்களை பிடித்து விசாரித்து இருக்கின்றனர். மூன்று பேரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்த நிலையில், அவர்கள் மூன்று பேரையும் தணிக்கை செய்திருக்கின்றனர். ரோந்து போலீசாரின் தணிக்கையின் போது அவர்களிடமிருந்து குருவி சுடும் துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தன.

உடனடியாக மூன்று பேரையும் கைது செய்த போலீசார் உக்கடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து இருக்கின்றனர். விசாரணையில், மூன்று நபர்களும் கூலி தொழிலாளிகள் என்பது தெரிய வந்தது. சமயபுரம் பகுதி சேர்ந்த அஜித்குமார், சந்திரசேகர் மற்றும் கௌதம் கர்நாடகாவில் கட்டிட வேலை செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

தற்பொழுது கோயம்புத்தூரில் கூலி வேலை செய்து வருகின்றனர். அவ்வப்போது குருவி சுடும் பழக்கம் உடைய இவர்கள், குருவி சுடுகின்ற துப்பாக்கியை வைத்து வழிப்பறியில் ஈடுபடலாம் என நினைத்திருக்கின்றனர்.

முன்னதாகவே ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கின்ற ரோந்து போலீஸாரால் மூன்று பேரும் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். போலீசார் கைதான நபர்களிடமிருந்து குருவி சுடுகின்ற துப்பாக்கி, பை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து மூவரை சிறையில் அடைத்திருக்கின்றனர்.

Views: - 270

0

0