கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் காட்டுயானைகள் முகாமிட்டதால் தற்காலிகமாக சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்று பேரிஜம் ஏரிக்கு சென்ற சுற்றுலாப்பயணிகள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஒரு சர்வதேச சுற்றுலா தலமாகும், இங்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக பேரிஜம் ஏரி உள்ளது. இந்த பேரிஜம் ஏரியானது வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகள் வனத்துறை அனுமதி பெற்று அதற்குரிய கட்டணம் செலுத்தி இந்த பகுதிக்கு சென்று வருகின்றனர்.
மேலும் படிக்க: ஜெயிக்க போறது நாங்கதான்.. ‘இந்தியா கூட்டணி’ அமோக வெற்றி பெறும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி..!
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி பேரிஜம் ஏரியில் பாரமரிப்பு பணிகள் மேற்கொள்வதாக வனத்துறையினர் சுற்றுலாப்பயணிகள் பார்வைக்கு தற்காலிகமாக தடை விதித்திருந்த நிலையில், ஒரு மாதத்திற்கு பின் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் கடந்த 28 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகள் பேரிஜம் பகுதிக்கு வனத்துறை அனுமதி பெற்று அங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை சுற்றுலா பயணிகள் வனத்துறை அலுவலகத்தில் பேரிஜம் ஏரியை கண்டு ரசிக்க உரிய அனுமதி சீட்டு பெற்று சென்றிருந்த நிலையில், இன்று பேரிஜம் உதவிப் பகுதியில் திடீரென காட்டு யானைகள் கூட்டம் முகாமிட்டதால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி பேரிஜம் ஏரி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்து வனத்துறையினர் மோயர் பாயிண்ட் நுழைவு வாயில் சோதனைச் சாவடி பகுதிக்கு பேரிஜம் ஏரியை பார்வையிட வந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை வனத்துறையினர் திருப்பி அனுப்பினர்.
மேலும் படிக்க: தனியாக செல்லும் பெண்கள் தான் டார்கெட்.. YouTube-ஐ பார்த்து செயின் பறிப்பில் ஈடுபட்ட என்ஜினியர்..!
மேலும், யானைகள் நடமாட்டத்தினை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் யானைகள் கூட்டம் அடர்ந்த வனப் பகுதிக்கு அல்லது வேறு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த பின் மீண்டும் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளதுள்ளது குறிப்பிடத்தக்கது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.