பெரம்பலூர் அருகே குளிக்கும்போது சிசிடிவி கேமரா மூலம் வீடியோ எடுப்பதாக குன்னம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட வயலப்பாடி அருந்ததியர் தெருவில் வசிக்கும் கஜேந்திரன் மனைவி விஜயலட்சுமி. இவர்களின் குடும்பத்தார் அம்சவல்லி, ராஜேஸ்வரி, மற்றும் லட்சுமி ஆகியோர், அதே தெருவில் வசிக்கும் பெரியசாமி அவரது மகன் தர்மராஜ் மற்றும் மதுபாலன் என்பவர்கள் மீது நாங்கள் குளிப்பதை சிசிடிவி கேமரா மூலம் வீடியோ எடுப்பதாக கடந்த 25.9.2023 அன்று குன்னம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது ;-விஜயலட்சுமி, அம்சவல்லி, ராஜேஸ்வரி ஆகிய நாங்கள், ராமசாமி – லட்சுமி ஆகியோர்களின் மருமகள்கள் ஆவோம். எங்கள் வீட்டில் போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் எங்கள் வீட்டின் அருகாமையிலேயே குளிப்பது, துவைப்பது போன்றவற்றை செய்து கொள்வோம். இதை அறிந்த பெரியசாமி, தர்மராஜ் மற்றும் மதுபாலன் ஆகியோர், முன்விரோத காரணமாக எங்கள் வீட்டில் உள்ள பெண்களை இழிவு படுத்தி அவமானப்படுத்தும் நோக்கில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு முதல் இதுநாள் வரை எங்களின் செயல்களையும், நாங்கள் குளிப்பதையும் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்கின்றனர்.
இதுகுறித்து பலமுறை குன்னம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். கடந்த 28.08.2023 அன்று புகார் கொடுத்துள்ளோம். இதுவரை எந்த புகாரையும் பதிவு செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை.
அதன் பின்பு கடந்த 25.09.2023 அன்று கொடுக்கப்பட்ட புகாரை வழக்குப்பதிவு செய்துள்ளனர். அது மட்டுமல்லாமல் மாவட்ட ஆட்சியரிடமும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கை குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளனர், என்று புகார் தரப்பினர் கூறியுள்ளனர்.
தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய்க்கு மத்திய அரசு உய்ப்பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவருக்கு சிஆர்பிஎப்…
காமெடி நடிகர் கவுண்டமணியின் மனைவி திடீரென உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் ஆணித்தரமான கருத்துக்களை காமெடி மூலமாக கொண்டு…
கமல்ஹாசனா இப்படி செய்தது? தனது உலக நாயகன் என்ற பட்டத்தை துறந்தாலும் இன்னும் அவரது ரசிகர்களின் மனதில் உலக நாயகனாகவே…
பொதுவெளியில் பிரபலங்களுக்கு திடீரென சங்கடங்கள் ஏற்படுவது வழக்கம்தான். ஆனால் ஒரு சிலர் அணிந்து வரும் ஆடையும் அப்படி சங்கடத்தை ஏற்படுத்திவிடுகிறது.…
கிரிக்கெட் ஜாம்பவனாக வலம் வருவபர் முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜூன் ஒரு…
This website uses cookies.