3 பெண்களுக்கு வீரதீர செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது : விருதுக்கான காரணம் தெரியுமா..?

15 August 2020, 2:37 pm
Kalpana chawla award - updatenews360
Quick Share

சென்னை : 74வது சுதந்திர தினத்தையொட்டி, 3 பெண்களுக்கு வீரதீர செயல்களை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் கல்பான சாவ்லா விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பெரம்பலூர் அருகே கொட்டறை நீர்தேக்கத்தில் குளிக்கச் சென்ற பவின்குமார், கார்த்திக் ஆகிய இளைஞர்கள் இருவரும், நீரில் மூழ்கி தத்தளித்து வந்தனர். இதனைக் கண்ட ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்செல்வி, முத்தம்மாள், ஆனந்த வல்லி ஆகிய 3 பேரும், தங்களின் உயிரை பிணையம் வைத்து அவர்களை காப்பாற்றினர்.

இந்த செய்தி வெளியானதை தொடர்ந்து, 3 பேரின் பெயர்களும் வீரதீர செயல்கள் புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி, இன்று சென்னையில் நடைபெற்ற 74வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது, செந்தமிழ்செல்வி, முத்தம்மாள், ஆனந்த வல்லி ஆகிய 3 பேருக்கும் கல்பான சாவ்லா விருதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி பாராட்டினார். மேலும், துணிச்சலுடன் இளைஞர்களின் உயிரை காப்பாற்றியதற்காக, ரூ.5 லட்சம் சன்மானமும் வழங்கி கவுரவித்தார்.

Views: - 101

0

0