3 வயது குழந்தை கிணற்றில் விழுந்து பலி : பெற்றோரின் அஜாக்கிரதையால் நடந்த விபரீதம்!!

18 April 2021, 9:52 am
Child Dead -Updatenews360
Quick Share

விழுப்புரம் : காடகனூர் அருகே 3 வயது சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகே உள்ள கிராமம் காடகனூர். இந்த கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் என்பவரது மகன் கோபிகண்ணன் (வயது 3).

கோபிகண்ணன் அருகில் இருந்த குழந்தைகளுடன் வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டின் பின்புறம் பாழடைந்த பயன்படுத்தப்படாத நிலையில் இருந்த கிணற்றில் தவறுதலாக கோபிகண்ணன் விழுந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் நீண்ட நேரமாக குழந்தை வீடு வராததை அடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடி உள்ளனர். அப்போது வீட்டின் பின்புறம் இருந்த பாழடைந்த பயன்படுத்தப்படாத கிணற்றில் உயிரிழந்த நிலையில் குழந்தை கோபிகண்ணன் சடலமாக மீட்கப்பட்டு, பின்னர் அங்கிருந்தவர்கள் குழந்தையை அழைத்துக்கொண்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றனர்.,

மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த அரகண்டநல்லூர் போலீசார் சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 வயது சிறுவன் பாழடைந்த பயன்படுத்தப்படாத கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 16

0

0