அருள் வந்து ஆடிய 3 வயது குழந்தை… மதுரையில் நடந்த அதிசயம் : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
18 March 2023, 7:04 pm
3 Yrs old - Updatenews360
Quick Share

மதுரையில் அருள் வந்து ஆடிய சிறுமியின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

மதுரை ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமையான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகுக் குத்துவது பூக்குழி தீச்சட்டி ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன் வேண்டி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிலையில் காப்பு கட்டு நிகழ்ச்சியின் போது சுமார் மூன்று வயது உடைய சிறுமிக்கு காப்பு கட்டும் போது திடீரென அருள் வந்து ஆடியுள்ளார்.

இதனை அப்பகுதி மக்கள் வெகுவாக பக்தி பரவசத்துடன் குழந்தையை சாந்தப்படுத்துவதுடன் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வேகமாக பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

தற்போது இந்த வீடியோ வைரலாகி பரவி வருகிறது.

Views: - 166

0

0