லாரி ஓட்டுநர்கள் மீது மிளகாய் பொடி தூவி பணம் பறிப்பு : 3 இளைஞர்கள் கைது

Author: kavin kumar
8 January 2022, 7:41 pm
Quick Share

வேலூர்: வேலூரில் லாரி ஓட்டுனர் மற்றும் கிளினரை கம்பியால் தாக்கியும், மிளகாய் பொடி தூவியும் 2 லட்சத்தி 75 ஆயிரத்தை வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா சின்னநெற்குணம் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் வடிவேலு (42). இவர் நெல் மூட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலத்திற்கு மற்றொரு ஓட்டுனர் அன்பழகனுடன் சென்றுள்ளார். அங்கு நெல் மூட்டைகளை இறக்கி விட்டு அதற்கான பணத்துடன் வேலூர் நோக்கி வந்தவர் கொணவட்டம் அருகே லாரியை நிறுத்தி விட்டு (வடிவேலு) தனது முதலாளிக்கு போன் செய்து பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு காரில் வந்த 3 பேர் திடீரென இருப்பு கம்பியால் வடிவேலுவை தாக்கியுள்ளனர். அவரின் சத்தம் கேட்டு லாரியில் தூங்கிக் கொண்டு இருந்த அன்பழகன் எழுந்து வந்து தடுக்க முயன்றபோது 3 நபர்களும் மிளகாய் பொடியை எடுத்து இருவரின் முகத்திலும் வீசி அவர்கள் வைத்திருந்த ரூ. 2 லட்சத்து 75 ஆயிரத்தை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ஓட்டுனர் வடிவேலு மற்றும் அன்பழகன் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் வேலூர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் சிறப்பு உதவி ஆயௌவாளர் வெங்கடேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனிடையே நேற்று நேஷனல் தியேட்டர் சந்திப்பு அருகே காவல் துறையினரின் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக சந்தேகத்திற்குக்கிடமாக வந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் லாரி டிரைவரிடம் பணம் பறித்தது தெரியவந்தது. விசாரணையில் சத்துவாச்சாரி விஜயராகவபுரத்தை சேர்ந்த ஸ்ரீதர், காட்பாடி கோபாலபுரம் வெங்கடேஸ்வராநகரை சேர்ந்த சரண்ராஜ், தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த தீனா என்ற விஷ்ணு ஆகியோர் என்பதும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 இரும்பு கம்பிகளையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து தொடர் விசாரணை பிறகு 3 வரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Views: - 751

0

0