காவலரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற 3 இளைஞர்கள் கைது : வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்!!

Author: Udayachandran
8 October 2020, 10:28 am
Madurai Crime - Updatenews360
Quick Share

மதுரை : காவலரை கத்தியால் குத்தி கொல்ல முயன்ற 3 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரை , ஊமச்சிகுளம் டிஎஸ்பி அலுவலகத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் சதுரகிரி . இவர் ஆரப்பாளையம் பகுதியில் டூவீலரில் சென்று கொண்டிருந்தார் . அப்போது ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், ராஜேஷ் மற்றும் நவீன் குமார் ஆகிய 3 பேரும் ஏட்டு சதுரகிரியை வழிமறித்து அவரை சரமாரியாக தாக்கினர்.

மேலும் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர் . தகவலறிந்த கரிமேடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து 3 பேரையும் கைது செய்தனர். படுகாயமடைந்த காவலர் சதுரகிரியை , மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து கரிமேடு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குடிபோதையில் இருந்த 3 பேரும், காவலரிடம் வழிப்பறி நோக்கத்தில் தகராறு செய்துள்ளனர் . இதை தடுத்ததால் கத்தியால் குத்தி காயப்படுத் தியதாக தெரிய வந்தது .

இதைத் தொடர்ந்து , விக்னேஷ் உட்பட 3 பேரையும் கைது செய்து , அவர்களிடமிருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் . மேலும் இவர்கள் 3 பேர் மீது நகரில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 44

0

0