சென்னையில் 30 பறக்கும் படைகள்… எதற்காக தெரியுமா?

25 March 2020, 8:19 pm
chennai corpn updatenews360
Quick Share

சென்னையில், மாநகராட்சி சார்பில் 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, ஊரடங்கு நிலவரத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று மேலும் பரவாமல் இருக்க இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்திலும் இது அமலில் உள்ள நிலையில் ஆங்காங்கே பொதுமக்கள் இதை மீறு செயல்களில் ஈடுபடுவதை காண முடிகிறது.

இச்சூழலில் சென்னையில் ஊரடங்கு நிலவரத்தைக் கண்காணிப்பதற்கு 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆணையர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னையில் ஊரடங்கை மீறுபவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர். இதற்காக, 30 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பறக்கும் படைகளில் மாநகராட்சி, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் இடம் பெற்றிருப்பார்கள். பொதுமக்கள் எவரும் வீட்டை விட்டு வெளியே வராதவாறு கண்காணிக்கப்படுவர். வீட்டில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருப்பதை  உறுதி செய்யவே, இத்தகைய பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.