மெட்ரோ ரயிலில் 4 மாதங்களில் 31.25 லட்சம் பேர் பயணம்: அதிகாரிகள் தகவல்..!!

3 January 2021, 10:48 am
Chennai metro train - updatenews360
Quick Share

சென்னை: செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மெட்ரோ ரயிலில் 31.52 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரத்தில் இருந்து செப்டம்பர் 6ம் தேதி வரை மெட்ரோ ரெயில் சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து கடந்த செப்டம்பர் 7ம் தேதியில் இருந்து ரயில் சேவை படிப்படியாக தொடங்கியது.

இதில் செப்டம்பரில் இருந்து டிசம்பர் 31ம் தேதி வரை 31 லட்சத்து 52 ஆயிரம் பயணிகள் பயணம் செய்தனர். இதில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 12.30 லட்சம் பேர் பயணித்தனர். இதில் கியூ.ஆர். குறியீடு பயணச்சீட்டை பயன்படுத்தி 83 ஆயிரத்து 813 பயணிகளும், பயண அட்டை பயணச்சீட்டை பயன்படுத்தி 18 லட்சத்து 49 ஆயிரத்து 944 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீதம் உள்ளவர்கள் டோக்கன் டிக்கெட்டை பெற்று பயணித்தனர். கியூ.ஆர்.குறியீட்டை பயன்படுத்தியவர்களுக்கு 20 சதவீதமும், பயண அட்டையை பயன்படுத்தியவர்களுக்கு 10 சதவீதமும் கட்டண சலுகை வழங்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 3

0

0