இன்ஸ்டாகிராம் மூலம் பழகி 16 வயது சிறுமியிடம் 32 சவரன் தங்க நகை பறிப்பு: காதல் மன்னனை கைது செய்து போலீசார்…!!

Author: kavin kumar
2 October 2021, 3:59 pm
Quick Share

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலம் பழகி 16 வய சிறுமியிடம் ஒரு லட்ச ரூபாய் பணம் 32 சவரன் தங்க நகை மோசடி செய்த இளைஞரைகைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் விஷ்ணுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி அவரிடம் 1 லட்சரூபாய் பணம், 32 சவரன் தங்க நகையை கொடுத்து ஏமாற்றம் அடைந்ததாக அவரின் பெற்றோர் வெங்கல் காவல் நிலையத்தில்அளித்த புகார் அளித்தனர். அதன்பேரில் மணவாள நகர் பகுதியைச் சேர்ந்த ரேவந்த் என்பவரை கைது செய்து போலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளம் மூலம் பழகி 16 வயசிறுமியிடம் ஏமாற்றி நூதனமாக ஒரு லட்ச ரூபாய் பணம் 32 சவரன் தங்க நகையை மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளைஞரிடம் போலீசார் நடத்தி வரும் உரிய விசாரணைக்கு பின்னரே சிறுமியிடம் எப்படி நகை மற்றும் பணத்தை ஏமாற்றினார் என்பது தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 298

0

0