கோவையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 35 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ்..!

17 October 2020, 8:25 pm
coimbatore_airport_corona_updatenews360
Quick Share

கோவை: கோவையில் இன்று 428 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது.

கோவையில் கடந்த இரண்டு வாரங்களாகவே தினசரி கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட கொரோனாவில் இருந்து குணமடைந்து வீட்டுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 428 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது.

சுகாதாரத் துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட பட்டியிலில் கோவை ஊரகம் மற்றும் நகரப் பகுதிகளை சேர்ந்த 389 பேருக்கு புதிதாக கொ ரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 495 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 35 ஆயிரத்து 116 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 3 ஆயிரத்து 861 பேர் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Views: - 17

0

0