நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆதிக்கம் செலுத்தும் பெண் வேட்பாளர்கள்: கோவை மாநகராட்சியில் 372 பெண்கள் போட்டி..!!

Author: Rajesh
10 February 2022, 1:21 pm
Quick Share

கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 372 பெண்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, மத்திய மண்டலம் என ஒவ்வொரு மண்டலங்களிலும் 20 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் 8 லிருந்து 9 வரை பெண் வேட்பாளர்கள் போட்டியிடும் வார்டுகளாக இருக்கின்றன.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 372 பெண்கள் வேட்பாளர்ள் போட்டியிடுகின்றனர். தெற்கு மண்டலத்தில் குறைந்த அளவிலும் வடக்கு மண்டலத்தில் 93 பெண் வேட்பாளர்களும் மத்திய மண்டலத்தில் 95 பெண் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

மேலும் பொதுப்பிரிவு வார்டுகளாக அமைக்கப்பட்டுள்ள 14 வார்டுகளிலும் பெண்கள் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இரண்டு வார்டுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வார்டுகளாக ஒதுக்கப்பட்டுள்ளன.

கோவைமாநகரைப் பொருத்தவரை தற்போது திமுக அதிமுக பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகள் இவர்களுக்கு இணையாக சுயேச்சை வேட்பாளர்கள் களம் கண்டு வருகின்றனர். கோவை மாநகரம் முழுவதும் தற்பொழுது தேர்தல் களம் சூடு பிடித்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

Views: - 755

0

0