தமிழகத்தில் 3வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் : 6 மணி நேரத்தில் 10 லட்சம் பேர் செலுத்தினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 September 2021, 1:40 pm
Mega Vaccination Camp -Updatenews360
Quick Share

தமிழகம் முழுவதும் 3-வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 6 மணிநேரத்தில் 10 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில்,தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 12-ஆம் தேதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அன்று ஒரே நாளில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்த நிலையில், 20 லட்சத்துக்கும் அதிகமானோர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

அதேபோல் கடந்த 19-ஆம் தேதியும் தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில், இன்றும் தமிழகம் முழுவதும் 3-வது முறையாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த 6 மணிநேரத்தில் 10 லட்சம் பேருக்கு போடப்பட்டுள்ளது.

Views: - 175

0

0