மணல் சிற்ப போட்டியில் தேசிய அளவில் 3வது இடம் : வெற்றி மகுடம் சூட்டிய அரசு பள்ளி மாணவி!!

4 February 2021, 1:33 pm
Sand Art - Updatenews360
Quick Share

கோவை : தேசிய அளவிலான மணல் சிற்பம் போட்டியில் கோவை அரசு பள்ளியில் பயிலும் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி கிருத்திகா. சமீபத்தில் சென்னையில் மணலில் சிற்பம் செய்யும் தேசிய அளவிலான போட்டியில் இந்த மாணவி கலந்து கொண்டார்.

இந்த போட்டியில் வெவ்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 38 பேர் கலந்து கொண்டனர். இதில் கிருத்திகா மணலில் தெருக்கூத்து, மயிலாட்டம், கரகாட்டம் போன்ற சிற்பத்தை தத்ரூபமாக செய்து முடித்தார்.

இதன் மூலமாக.தேசிய அளவில் மாணவி மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இவர் தமிழக முதலமைச்சரிடம் பரிசு பெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0