கோவையில் 3வது அலை பரவலா? முக்கிய நகரை முடக்கிய சுகாதாரத்துறை அதிகாரிகள்!!
Author: Udayachandran RadhaKrishnan18 August 2021, 1:49 pm
கோவை : கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரில் ஒரு பகுதியில் ஒரே நாளில் 12 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து அடைக்கப்பட்டது
கருமத்தம்பட்டி அருகே உள்ள கொங்கு மாநகர் பகுதியில் நூற்பாலையில் பணிபுரியும் ஐந்து நபர்களுக்கும், அவர்கள் தங்கியிருந்த மேன்சன் கட்டிடத்திற்கு பாதுகாப்பான வார்டன்,சானிடைசர் பராமரிப்பு இல்லாத காரணத்தால் கட்டிட உரிமையாளருக்கு சுகாதார அதிகாரிகள் 5000 ம் அபாராத தொகை விதிக்கப்பட்டது.
அதேபோல் சோமனூர் அடுத்த செல்வபுரம் காலனியில் மரவள்ளி கிழங்கு வியாபாரியான 50 வயதுடைய நபர் ஒருவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து கொடிசியா வளாகத்தில் உள்ள நோய்த்தற்று சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
இதனையடுத்து அப்பகுதியில் நடைபெற்ற பரிசோதனையில் தற்பொழுது மளிகை கடை நடத்தி வரும் தம்பதி இருவருக்கும் மற்றும் அருகில் உள்ள மற்ற ஆறு நபர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈஸ்வரமூர்த்தி லிவிங்ஸ்டன் மற்றும் கருமதம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி ஆகியோர் தலைமையில் அப்பகுதி முழுவதும் தகர சீட் வைத்து அடைத்தனர். மேலும் வெளியாட்கள் உள்ளே செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து அப்பகுதி முழுவதும் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் வீதி முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை சார்பாக கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
0
0