மதுரையில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் தற்கொலை செய்ததை அறிந்த மனைவி, இரு பெண் பிள்ளைகளுடன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தொட்டியப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். பட்டதாரியான இவர், கரூரில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், மதுரை பேரையூரை சேர்ந்த வீரசெல்வி என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த தம்பதியினருக்கு இருபெண் குழந்தைகள் பிறந்த நிலையில், மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் வீர செல்விக்கு ஆசிரியர் பணி கிடைத்த நிலையில், மதுரை மாநகர் அனுப்பானடியை சுற்றியுள்ள பகுதிகளில் குடும்பத்துடன் வாடகை வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரை அனுப்பானடி பாபுநகர் 4 ஆவது தெரு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறியுள்ளனர். இந்நிலையில் செந்தில் குமார் சில வருடங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். அவ்வப்போது, வீர செல்வியின் பணத்தை எடுத்துச் சென்று மது அருந்துவது, வெளியில் தவறான செயல்களில் ஈடுபடுவது என இருந்து வந்துள்ளார். இதனால், அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், செந்தில்குமார் நேற்று மாலை திடிரென சிலைமான் பகுதியில் வைகையாற்று கரையோரத்தில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் (பார்க்கிங்) தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் செந்தில் குமாரின் மனைவியிடம் கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, சில நிமிடங்களிலயே செந்தில்குமாரின் மனைவி வீர லெட்சுமி மற்றும் மகள்களான தனுஸ்ரீ (13 ), மேகா ஸ்ரீ (8) ஆகிய மூன்று பேரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இதனையடுத்து, அருகில் உள்ளவர்கள் மாலையில் இருந்து கதவு திறக்கப்படாத நிலையில், ஜன்னல் வழியாக பார்த்தபோது, மூவரும் தற்கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தெப்பக்குளம் காவல்துறையினர் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். பின்னர் மூவரின் உடலை கைப்பற்றி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கணவன் வேலைக்கு செல்லாமல் சுற்றிதிரிந்த நிலையில் கணவன் – மனைவியிடையே ஏற்பட்ட சிறுசிறு தகராறால், எதுவும் அறியாத 8 மற்றும் 4ஆம் வகுப்புகள் படித்துக்கொண்டிருந்து பெண் குழந்தைகளும் பெற்றோருடன் பரிதாபமாக உயிரை மாய்த்துக்கொண்ட சோகம் அரங்கேறியுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் – மனைவி 2 பெண் குழந்தைகளுக்கு என நால்வரும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.