அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து : 4 பேர் பலியான சோகம்!!

20 September 2020, 4:53 pm
Tirupur Accident - Updatenews360
Quick Share

திருப்பூர் : சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியை சேர்ந்தவர் மதன்குமார். இவர் இன்று காலை திருப்பூரில் இருந்து காங்கேயத்திற்கு தனது சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார்.காங்கேயம் சாலை நாச்சிபாளையத்தை அடுத்த ரங்கபாளையம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக எதிரே இருசக்கர வாகனத்தில் மோதியது.

அதில் ரங்கபாளையம் பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் லிங்குசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருக்கு பின்னால இரு சக்கர வாகனத்தில் வந்த திருப்பூர் முதலிபாளையம் பகுதியை சேர்ந்த மிதுன்,அவரது சகோதரி மெர்சிகா மற்றும் தாய் ஜீவா மூவரும் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் மிதுன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் படுகாயமடைந்த மிதுனின் தாய் ஜீவா தங்கை மெர்சிகா இருவரையும் மீட்ட அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.திருப்பூரில் முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பலனில்லாமல் அவர்களும் உயிரிழந்தனர்.

இதன் மூலம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.விபத்து குறித்து தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த அவிநாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து காரை அதிவேகமாக ஓட்டி வந்த மதன் குமார் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 0

0

0