18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்: புனேவில் இருந்து 4 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள் சென்னை வருகை!!

Author: Aarthi Sivakumar
9 September 2021, 11:37 am
Quick Share

சென்னை: கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 3 கோடியே 50 லட்சத்து 64 ஆயிரத்து 560 தடுப்பூசிகள் வந்து உள்ளன.

இதனிடையே மாநிலம் முழுவதும் வரும் 12ம் தேதியன்று 10 ஆயிரம் சிறப்பு முகாம்களை நடத்தி 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக கூடுதலாக 1 கோடி தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் புனேவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 34 பெட்டிகளில் 4 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. பின்னர் அவை, தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.

Views: - 280

0

0