எதிரிகளை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு வீசிய 4 ரவுடிகள்: மின்னல் வேகத்தில் சுற்றி வளைத்த போலீசார்…!

6 July 2021, 8:54 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் எதிரிகளை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு வீசிய 4 ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

புதுச்சேரியில் நேற்று முன் தினம் வண்ணாரபேட்டை பகுதியில் உள்ள ரெயில் டிராக் அருகே மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டு வீசவிட்டு சென்றனர். இது தொடர்பாக ஒதியஞ்சாலை போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை தமிழக பகுதியான கோட்டகுப்பத்தில் தலைமறைவாக இருந்த புதுச்சேரி வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த ரவுடிகளான கார்த்தி, சுனில் @ கிஷோர், அருள், அன்புமணி ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தய போது வாணரப்பேட்டையை சேர்ந்த பீட்டர்,

தேவா ஆகியோர்க்கும் தங்களுக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு, அதில் பீட்டர் தரப்பினர் சுனில் தரப்பினரை தாக்கியதால் பீட்டர் மற்றும் அவனது கூட்டாளியான தேவாவை கொலை செய்யவே நாட்டு வெடி குண்டை வீசியதாகவும், இவர்களை கண்ட உடன் பீட்டர் தரப்பினர் தப்பி ஒடிவிட்டதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் அரியாங்குப்பத்தில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து கொண்டு வரும் போது தமிழக பகுதியான என்.ஆர் பாளையத்தில் ஒரு வாலிபரை வெட்டி விட்டு வந்ததாகவும்,

இது தொடர்பான வழக்கு கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடியில் பதிவாகி இருப்பதும் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிடிப்பட்ட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களிடமிருந்து கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மோகன் உட்பட்ட இரண்டு பேரை போலிசார் தேடி வருவதாகவும், கைது செய்யப்பட்டவர்கள் மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரைக்கப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Views: - 365

0

0