இலங்கை ரோந்து படகு மோதி 4 தமிழக மீனவர்கள் பலி : உடலை ஒப்படைக்க கோரி உறவினர்கள் மறியல்!!

21 January 2021, 1:28 pm
Pudukottia Salaimariyal - Updatenews360
Quick Share

இலங்கை ரோந்து படகு மோதி 4 தமிழக மீனவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் மீனவர்களின் உடலை ஒப்படைக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்திலிருந்து திங்கள்கிழமை காலை 214 விசைப்படகுகளில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச்சென்றனர்.

இலங்கை கடற்படையின் படகு மோதியதால் தமிழக மீனவர் படகு கவிழ்ந்து 4 பேர் மாயம்  ஹெலிகாப்டர் மூலம் கடலில் தேடும் பணி தீவிரம் | - hindutamil.in

இவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கியசேசு (வயது 50) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அதே பகுதியைச் சேர்ந்த மெசியா (வயது 30) உச்சிபுளியைச் சேர்ந்த நாகராஜ், செந்தில்குமார் மண்டபத்தைச் சேர்ந்த சாம் ஆகிய நான்கு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

கோட்டைபட்டினத்திலிருந்து 214 விசைப் படகுகளில் கடலுக்குச் சென்ற மீனவர்களில் 213 விசைப்படகுகள் கரை திரும்பியது. ஆனால் ஆரோக்கியசேசுவிற்கு சொந்தமான விசைப்படகில் சென்ற நான்கு பேரும் கரை திரும்பவில்லை.

இதுகுறித்து சக மீனவர்கள் மேற்கொண்ட விசாரணையில் ஆரோக்கியசேசுவின் விசைப்படகை இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் படகு கடலுக்குள் மூழ்கி 4 பேரும் இறந்துவிட்டதாக தெரிய வந்தது.

இதனிடையே இலங்கை ரோந்து படகு மோதி பலியான நான்கு மீனவர்களின் மெசியா, செந்தில்குமார் இரண்டு பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. மொத்தம் 4 மீனவர்களையும் மீட்டு சம்பந்தப்பட்ட உறவினர்கள் ஒப்படைக்க வேண்டும் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் ஆயிரம் மீனவர்கள் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0