கோவையில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக விற்ற கும்பல்: 4 இளைஞர்கள் கைது!!

4 July 2021, 9:31 am
Quick Share

கோவை : கோவையில் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தி அதனை விற்பனை செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

drugs_updatenews360

மதுக்கடைகள் மூடப்பட்ட சூழலில், இளைஞர்கள் மத்தியில் போதை பொருட்களான கஞ்சா, போதை ஊசி பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்துள்ளது. சிலர் வெளி ஊர்களில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி கோவை வந்து விற்பனை செய்து வருகின்றனர் அவ்வாறு வருபவர்களை மாவட்ட எல்லையில் வைத்து போலீசார் கைது செய்து வருகின்றனர்.

இந்த சூழலில், கோவை ஆத்துப்பாலம் பொள்ளச்சி சாலையில் போதை மாத்திரைகளுடன் சென்றுகொண்டிருந்த இளைஞர்களை மடக்கி பிடித்த போலிஸ் அவர்களிடமிருந்து 50 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்திருகின்றனர். நைட்ரோஜெப்பம் என்ற போதை தருகின்ற மாத்திரை மன பதட்டம், நடுக்கத்துக்கு பயன்படுத்தக்கூடியது.

தொடர்ந்து முஹம்மது யாசிர், முஹம்மது முஸ்தபா, அன்சாரின், முகமது ஆகிய நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்கள் பயன்படுத்தி விற்பனை செய்த போதை மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர். இளைஞர்களின் இத்தகைய செயல்கள் எதிர்காலத்தை நினைத்து கவலையடைய செய்திருக்கின்றது.

Views: - 165

1

0