40 மீனவர்களுக்கு மீன்பிடி மோட்டார் என்ஜின் மற்றும் உபகரணங்கள் வழங்கல்…!

8 November 2019, 7:49 pm
thiruvallur fisherman-Updatenews360
Quick Share

திருவள்ளூர்: பழவேற்காட்டில் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் மீன்வளத்துறை மூலம் 40 மீனவர்களுக்கு 16 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மீன்பிடி மோட்டார் என்ஜின் மற்றும் உபகரணங்களை மீன்வளத்துறை அதிகாரிகள் வழங்கினர்.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் மீன்பிடித் தொழில் செய்யும் மீனவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசின் சார்பில் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு 40% மானிய விலையில் மீன் பிடிக்க செல்லும் படகுகளுக்கு இன்ஜின் மோட்டார்கள் மற்றும் உபகரணங்களை 40 பயனாளிகளுக்கு முதல் கட்டமாக16 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வழங்கினர். மேலும் மானிய விலையில் மோட்டார் இன்ஜின் மற்றும் உபகரணங்களை பெற விண்ணப்பித்துள்ள 40 பேருக்கும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.