தூத்துக்குடி அருகே கத்தியை காட்டி மிரட்டி 40 வயது பெண்ணை இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்த ரவுடி உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் தன்னுடைய வீட்டிற்கு கடந்த 14ம் தேதி இரவு நடந்து சென்று கொண்டிருந்து உள்ளார். அப்போது, தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தைச் சேர்ந்த கட்டை முருகன் என்பவரும், அழகேசபுரத்தை சேர்ந்த கோகுல்ராம் என்பவரும், இருசக்கர வாகனத்தில் வந்து பெண்ணை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி தங்களது இருசக்கர வாகனத்தில் கடத்திக் கொண்டு சென்றுள்ளனர்.
தருவைக்குளம் கல்மேட்டில் உள்ள ஒரு வீட்டிற்கு கொண்டு சென்று, அங்கு கட்டை முருகன் அவரை கற்பழித்துள்ளார். பின்னர் காலையில் பெண்ணின் வீட்டருகில் உள்ள சந்திப்பில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, கோகுல்ராம் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு உடலுறவுக்கு அழைத்துள்ளார்.
அவர் வர மறுத்ததால் அவரை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பயந்த அந்த பெண் 15 ம் தேதி தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இது தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், இந்த வழக்கு தொடர்பாக உரிய விசாரணை நடத்தஅனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் வனிதா மற்றும் தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் மணிமாறன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, தாளமுத்துநகர் பகுதியில் ஒருவரை அரிவாளை காட்டி மிரட்டி 500 ரூபாயை பறித்துக் கொண்டு, அங்கிருந்து வேகமாக தனது பைக்கில் சென்ற கட்டை முருகன் தவறி கீழே விழுந்துள்ளார். அதில் அவருக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டு கை முறிவு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, முருகன் என்ற கட்டை முருகன் மற்றும் கோகுல்ராம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் பிரபல ரவுடி கட்டை முருகன் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்ற போது, அவரது வலது கையில் முறிவு ஏற்பட்டதற்கு போலீசார் மாவுகட்டு போட்டு சிகிச்சை அளித்தனர்.
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
This website uses cookies.