45 முறை போதைப் பொருள் கடத்தல்.. வாயே திறக்காத முதலமைச்சர் ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருக்கிறார் : இபிஎஸ் கடும் விமர்சனம்!
தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது என கூறி அதிமுக சார்பில் இன்று தமிழக முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு போராட்டத்தை முன்னெடுத்தார்.
இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.
ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தவறி உள்ளது. தமிழகம் தற்போது போதைப்பொருள் விற்பனை மையமாக செயல்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக், பல ஆண்டுகளாக போதை பொருள் கடத்தி வந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஜாபர் சாதிக், திமுக அயலக அணி பொறுப்பாளராக இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக இதுவரை 45 முறை போதைப்பொருளை இவர் கடத்தி உள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளது.
அதன் மூலம் கிடைத்த பணத்தில் திமுக நிர்வாகிகளுக்கு நிதி அளித்ததாகவும், ஹோட்டல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனை முறையாக விசாரித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று தமிழக முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகிறோம்.
ஜாபர் சாதிக் முதலமைச்சரிடம் நிதி வழங்குவது போலவும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதி வழங்குவது போலவும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. காவல்துறையினரிடம் ஜாபர் சாதிக் நட்போடு இருப்பது போல புகைப்படம் வெளியாகி வருகிறது இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.
ஜாபர் சாதிக் மீது 2019ஆம் ஆண்டே மலேசியாவுக்கு போதை பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்ட பின்னர் கடந்த 10 நாட்களில் மட்டும் 150 கோடி மதிப்பிளான போதை பொருட்கள், ராமேஸ்வரம் மண்டபம் கடற்கரையில் கடத்தப்பட இருந்த போதைப்பொருட்கள், நேற்று கூட புதுக்கோட்டை கடற்கரையில் கடத்தப்பட இருந்த போதை பொருட்களை மத்திய போதைப்பொருள் கடத்தல் பிரிவு போலீசார் தான் கைது செய்து வருகின்றனர்.
தமிழக போலீசார் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் கும்பகர்ணன் போல தூங்கி வருகின்றனர் எனவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நடைபெற்ற மனித சங்கிலி போரட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.