குத்து னா இப்படித்தா குத்தணும் : வேற லெவல் சாதனை செய்த அரபிக் குத்து பாடல்.. இணையத்தில் தெறிக்கவிட்ட விஜய் ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2022, 1:51 pm
Arabic Kuthu Record- Updatenews360
Quick Share

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக வலம் வரும் விஜய், பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். பீஸ்ட் படத்தில் அரபிக் குத்து பாடல் கடந்த 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது.

Arabic Kuthu' from 'Beast' sets Internet on fire; garners 20 million views  in less than 24 hours!- The New Indian Express

இந்த பாடல் வெளியானது பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி யூடியீப்பில் ட்ரெண்டிங்கானது. யூடியூப் ட்ரெண்டிங்கில் முதவிடம் இருந்து வரும் இந்த பாடல் நான்கே நாட்களில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

Arabic Kuthu': 5 takeaways from first single of Vijay-led 'Beast' |  NewsBytes

அதாவது 5 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரபிக் குத்து பாடல் வெளியானதும் பல பிரபலங்கள் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோவை வெளியிட்டு வருகின்றனர்.

இன்ஸ்டா ரீல்சில் தமிழ் சினிமா பிரபலங்கள் உட்பட வெளிநாடு பிரபலங்களும் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதுவரை 2 லட்சம் கமெண்ட்டுஸ்களுக்கு மேல் பாடலை பாராட்டி கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Image

மேலும் 3 மில்லியான் லைக்சுகளை குவித்துள்ளது. இந்த நிலையில் 50 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளதால் ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாக உள்ளது.

Views: - 658

0

0