“எனக்கும் நடந்திருக்கு சார்“ : “முகநூல் ரோமியோ“ காசி வழக்கில் திடீர் திருப்பம்!!

7 November 2020, 1:12 pm
Kasi Case- Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களைச் சேர்ந்த பெண்களை காதலித்து கர்ர்பபமாக்கி ஏமாற்றிய நாகர்கோயில் காசியை 5 நாட்கள் சிசிபிஜடி காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற இளைஞர் தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் மற்றும் திருமணமான பெண்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக தொடர்பு கொண்டு அவர்களைத் தனது காமப் பசிக்கு இரையாக்கி அதோடு அவர்களிடமிருந்து பணம் நகைகள் என மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இப்புகார்கள் தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டத்தின் 5 காவல் நிலையங்களில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கந்துவட்டி தொடர்பாக ஒரு இளைஞரும் தங்களை ஏமாற்றி நெருக்கமாக இருந்து வீடியோ எடுத்தது உள்ளிட்ட புகார்களுடன் ஐந்து பெண்களும் புகார் அளித்திருந்தனர்.

இவ்வழக்கை கன்னியாகுமரி மாவட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், திடீரென சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், திடீரென மேலும் ஒரு பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

அதனால் காசி மீது கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவியை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டு நட்பாக பழகி, பின்னர் பாலியல் வன்முறைக்கு இரையாக்கிய தாக மாணவி சிபிசிஐடி போலீசாருக்கு புகார் அளித்திருந்தார்.

அந்த புகார் தற்போது விசாரணை மேற்கொண்டு வரும் டிஎஸ்பி அனில் குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு அது தொடர்பாக காசியிடம் விசாரணை மேற்கொள்ள, அவரை காவலில் ஒப்படைக்க கேட்டு நாகர்கோயில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் மனு சமர்ப்பித்தனர்.

அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. 10 நாட்கள் காவலில் அளிக்க கேட்டு மனு அளித்துள்ள நிலையில் நாகர்கோவில் காசியை சிபிசிஐடி போலீசாரின் விசாரணைக்காக 5 நாட்களில் காவலில் வைக்க அனுமதி கொடுத்து நாகர்கோயில் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 1 நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மீண்டும் வரும் புதன்கிழமை மாலை 3 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

Views: - 19

0

0