உதகையில் 5 நாள் சுற்றுப்பயணம் : குடும்பத்துடன் இன்று மாலை செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி !!
Author: Udayachandran RadhaKrishnan15 October 2021, 12:11 pm
புதிதாக பொறுப்பேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக குடும்பத்துடன் இன்று மாலை உதகைக்கு செல்கிறார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணமாக குடும்பத்துடன் இன்று மாலை ஊட்டி செல்கிறார். ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிடும் ஆளுநர் 19ம் தேதி காலை சென்னை திரும்புகிறார்.
இதனிடையே, சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்என் ரவியுடன் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் சந்தித்து உள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஏற்கனவே ஆளுநரை சந்தித்த நிலையில், தற்போது எல் முருகனும் சந்தித்து பேசி வருகிறார்.
Views: - 439
0
0