கோவையில் செய்தியாளரை தாக்கிய விவகாரம் : தி.மு.க நிர்வாகிகள் 5 பேர் அதிரடி கைது..!

18 January 2021, 5:19 pm
5 Arrest - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த செய்தியாளரை தி.மு.க.,வினர் தாக்கிய சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்

கோவை குறிச்சி பகுதியில் கடந்த 16ம் தேதி திமுக சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக., எம்.பி., ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். பொங்கல் விழா என்பதால் அந்த இடத்திற்கு செய்தியாளர் சந்திரசேகர் என்பவர் செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த திமுக.,வினர் சந்திரசேகரை மிரட்டியதோடு புகைப்படம் எடுக்க கூடாது என்று கூறி அவரை தாக்கினர். மேலும், அவரது செல்போனை உடைத்து நொறுக்கினர். அங்கிருந்த மற்ற பத்திரிகையாளர்கள் சந்திர சேகரை மீட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போத்தனூர்ன் போலீசார் திமுக., நிர்வாகிகளான காளிமுத்து, ரவிச்சந்திரன், மணிகண்டன், சந்திரசேகர், பெஞ்சமின் மற்றும் முத்தலிப் ஆகியோர் மீது வழக்குப்பதிவ்ய் செய்தனர்.

இதில் முத்தலிப் தவிர ஏனைய 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

Views: - 0

0

0