”கையில மை” இருந்தா மாஸ்க் இலவசம் : அசர வைத்த நிறுவனம்!!

7 April 2021, 3:44 pm
Mask Free -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை நிறுவனத்தார் நேற்று நடந்த தேர்தலில் வாக்களித்த வாக்காளர்களுக்கு கை விரலில் உள்ள அடையாள மையை ஆதாரமாக கொண்டு தலா ஒருவருக்கு 5 முக கவசங்கள் இலவசமாக வழங்கினர்.

உலக சுகாதார தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடபட்டது. அதிலும் இந்த ஆண்டு கொரோனா தொற்றில் இருந்து விடுபட தேவையான விழிப்புணர்வு நிகழ்சிகள் நடத்தபட்டு வருகின்றனர். அந்தவகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை நிறுவனத்தார், உலக சுகாதார தினத்தை விழாக்கள் போன்ற நிகழ்சிகளுக்கு பதிலாக இலவசமாக முக கவசங்கள் வழங்கி அத்தினத்திற்கு பெருமை சேர்த்தனர்.

அதிலும் நேற்று நடைபெற்ற தேர்தலில் வாக்களித்த வாக்களர்களுக்கு அவர்களின் கை விரல் மையை அடையாளம் கண்டு முக கவசங்களை வழங்கினர். ஏராளமானோர் தங்கள் கை விரல் மையை காண்பித்து முக கவசங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மீண்டும் பரவி வரும் கொரோனா தடுப்பு விழிப்புணர்வாகவும் முக கவசங்கள் வழங்குவதாகவும் இதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Views: - 62

0

0