5 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் : தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையம் நேரில் விசாரணை!

12 November 2020, 3:53 pm
Harassed Inquiry - Updatenews360
Quick Share

புதுச்சேரி : 5 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

புதுச்சேரி கடந்த சில தினங்களுக்கு முன்பு சாத்தமங்கலம் பகுதியில் வாத்து மேய்க்க கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகளை பாலியல் வண்கொடுமை செய்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யபட்ட நிலையில், இன்று மேலும் ஒரு சிறுவன் உட்பட இரண்டு பேரை மங்கலம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதனிடையே இந்த வழக்கை விசாரிக்க தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் ஆனந்த் குழந்தைகள் அடைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த இடம் மற்றும் மங்கலம் காவல் நிலையத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேசிய குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த், முக்கிய வழக்கு என்பதால் தேசிய குழந்தைகள் நல ஆணையம் நேரடியாக இந்த வழக்கை விசாரிப்பதாகவும் இந்த விசாரணையின் அறிக்கை டெல்லியில் உள்ள ஆணைய தலைவரிடம் சமர்பிக்கவுள்ளதாகவும், இவ் வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்புள்ளதாகவும் அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.

Views: - 22

0

0