நகைகடையின் பூட்டை உடைத்து 5 கிலோ வெள்ளி கொள்ளை : கோவையில் துணிகரம்!!

8 November 2020, 5:09 pm
Jewelery Theft - Updatenews360
Quick Share

கோவை : சரவணம்பட்டி அருகே நகைக்கடை பூட்டை உடைத்து 5 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சரவணம்பட்டி அருகேயுள்ள விசுவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் அதேபகுதியில் சத்தி சாலையில் மாருதி ஜூவல்லரா என்ற நகைக்கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் முருகன் நேற்றிரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் கடையின் முன்பக்க பூட்டை உடைத்து உள்ளே சென்று 5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 10 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இன்று காலை கடையின் பூட்டு உடைந்து இருப்பதை பார்த்து, அப்பகுதியினர் முருகனுக்கு தகவல் அளித்தனர். இதுகுறித்து முருகன் அளித்த புகாரின் பேரில், சரவணம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 16

0

0