5 மாத பெண் குழந்தை கடத்தல் : ரூ.1 லட்சத்திற்கு விற்க முயன்ற 3 பேர் கைது.. 48 மணி நேரத்தில் போலீசார் அதிரடி!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2021, 2:52 pm
Child Rescue -Updatenews360
Quick Share

கோவை : பொள்ளாச்சி அருகே குழந்தை கடத்தல் வழக்கில் மூன்று குற்றவாளிகள் கைது செய்து துரிதமாக செயல்பட்டு குழந்தையை மீட்ட ஆனைமலை போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் மைசூரைச் சேர்ந்த பழங்குடியின தம்பதியினரின் 5 மாத பெண் குழந்தை கடத்தல் சம்பவத்தில் குழந்தையின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆனைமலை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தனிப்படை அமைத்து மர்மநபர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அங்கலக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராமர் மற்றும் சேத்துமடையை சேர்ந்த முத்துராஜ் என்ற இருவரும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் அங்கலக்குறிச்சியை சேர்ந்த முத்துப்பாண்டி- கற்பகம் தம்பதியினருக்கு பல ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாததால் குழந்தையை இவர்களுக்கு 90,000 ரூபாய்க்கு  கடத்தி விற்பனை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட இருவர் அல்லாது பணம் கொடுத்து குழந்தையை பெற்றதற்காக முத்துப்பாண்டி என்பவரையும் கைது செய்த போலீசார் மூவரையும் பொள்ளாச்சி குற்றவியல் நீதிமன்றம் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.

குழந்தை காணாமல் போன 48 மணி நேரத்தில் தனிப்படை அனைத்து துரிதமாக செயல்பட்ட ஆனைமலை போலீசாரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Views: - 415

0

0