5 பைசா சில்லறையுடன் சிக்கன் பிரியாணி வாங்க குவிந்த மதுரை மக்கள்: திறப்பு விழா அன்றே மூடப்பட்ட உணவகம்..!!

21 July 2021, 5:14 pm
Quick Share

மதுரை: செல்லூர் பகுதியில் செல்லாத 5 பைசாவுக்கு பிரியாணி என்ற அறிவிப்பால் ஏராளமான பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியில் தெற்குவாசல் சுகன்யா பிரியாணி என்று புதிதாக பிரியாணி கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. முன்னதாக பிரியாணி கடை சார்பாக, செல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடை திறப்பு விழா குறித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தது.

மதுரையில் பழைய 5 பைசாவுக்கு பிரியாணி ; தனி மனித இடைவெளியின்றி குவிந்த மக்கள்  - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online |  Tamilnadu News

அந்த போஸ்டரில் பழைய செல்லாத 5 பைசா நாணயத்தை கொண்டு வருபவர்களுக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இன்று திறப்பு விழா என்பதால் வீட்டிலிருந்த செல்லாத ஐந்து பைசா நாணயங்களை சேகரித்து மக்கள் செல்லூர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடைக்கு படையெடுக்க ஆரம்பித்தனர்.

5 பைசா பிரியாணிக்காக குவிந்த மக்கள்; திறந்த வேகத்திலேயே கடையை மூடிய ஓனர்!

மதியவேளையில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் 5 பைசா நாணயத்தை கையில் வைத்துக்கொண்டு பிரியாணி வாங்குவதற்கு கூட்டமாக குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக சமூக இடைவெளி இன்றி முகக்கவசம் இல்லாமல் 5 பைசா நாணயத்தை கொண்டுவந்து பிரியாணி வாங்குவதற்கு பொதுமக்கள் குவிந்தனர். இதனை தொடர்ந்து கடை உரிமையாளர்கள் ஒரு கட்டத்தில் அலைமோதிய மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் பிரியாணி கடையின் ஷட்டரை இழுத்து மூடினார்கள்.

5 பைசா பிரியாணிக்காக குவிந்த மக்கள்; திறந்த வேகத்திலேயே கடையை மூடிய ஓனர்!

அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு வந்து கூட்ட நெரிசலை போக்குவதற்காக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கூட்டமாக குவிந்து இருந்த மக்களை அப்பகுதியில் இருந்த அப்புறப்படுத்தினர். ஐந்து பைசா பழைய செல்லாத நாணயத்தை கொடுத்தால், பிரியாணி என்றவுடன் கூட்டம் கூட்டமாகக் கொரோனா நோய் தொற்றை மறந்து பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி குவிந்ததால் அந்த பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 117

0

0