‘ஏழை மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்தவர்’ : 5 ரூபாய் மருத்துவருக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி புகழாரம்..!
17 August 2020, 11:38 amசென்னை : 5 ரூபாய் மருத்துவர் என அழைக்கப்படும் மருத்துவர் திருவேங்கடத்தின் மறைவிற்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடியில் பொதுமக்களுக்கு வெறும் ரூ. 5க்கு மருத்துவம் பார்த்து வந்தவர் மருத்துவர் திருவேங்கடம். மருத்துவ படிப்பின் உண்மையான நோக்கம் சேவை செய்வதே என்பதை அறிந்து, ஏழை மக்களுக்காக ரூ. 5 கட்டணம் பெற்றுக் கொண்டு சிகிச்சை அளித்து வந்தார். இவரது சேவை அனைவரிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், கடந்த 13ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மருத்துவர் திருவேங்கடம், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இவரது மறைவு அனைவரும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
இவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் செய்தியில், “சென்னையில் ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்காக தன்னையே அர்ப்பணித்து மருத்துவ சேவை புரிந்த வியாசர்பாடியைச் சேர்ந்த 5 ரூபாய் மருத்துவர் திரு. திருவேங்கடம் அவர்கள் காலமான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
0
0