கொரோனா தடுப்பு பணிக்கு உண்டியல் சேமிப்பு ரூ.1,045-ஐ வழங்கிய 5 வயது சிறுமி : குவியும் பாராட்டு..!!

13 May 2021, 1:07 pm
kumari girl - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : கொரோனா தடுப்பு பணிகளுக்காக 5 வயது சிறுமி, தனது உண்டியல் சேமிப்பு தொகையான ரூ.1,045-ஐ முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் நிலை பரவல் கோரதாண்டம் ஆடிவருகிறது. இதனால் நாளுக்கு நாள் சாவு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் அதிகப்படியான நிவாரண நிதி வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து. முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு, குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்த ஏஞ்சல் சுபாஷினி என்ற ஐந்து வயது குழந்தை, தான் உண்டியலில் சேமித்து வைத்த தொகையான ரூ.1045 யை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜனிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது, குழந்தையின் தந்தை சுப்பையா சூரியகுமார் மற்றும் ஆசாரிப்பள்ளம் திமுக வட்ட செயலாளர் விமல்,நிகல் உடனிருந்தனர். ஐந்து வயது சிறுமி உண்டியல் பணம் ரூ.1045 வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா காலத்தில் சமூக நலன் கருதி, குழந்தைகள் அடுத்தடுத்து தனது சேமிப்பு தொகையை அரசுக்கு வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 109

0

0