போட்டி போட்ட தனியார் கல்லூரி பேருந்துகள்… பைக் மீது மோதி 5 வயது சிறுவன் பலி : பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2022, 8:14 pm
Accident 5yrs old dead -Updatenews360
Quick Share

விழுப்புரம் : போட்டி போட்டுக்கொண்டு சென்ற தனியார் கல்லூரி பேருந்துகள் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டு 5 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த நிலையில் பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.

கடலூர் பண்ருட்டி எல்.என்.புரம் பகுதியை சேர்ந்தவர் ரஜினி (வயது 35). இவர் காங்கேயனூர் கிராமத்தை சேர்ந்த இவரது மாமா அன்பரசன் மகன் 5 வயது குழந்தை கவின் ஷர்மா உடன் இருசக்கர வாகனத்தில் விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது கோலியனூர் மார்க்கத்தில் இருந்து கும்பகோணம் சாலையில் பண்ருட்டி சென்று கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான இரண்டு கல்லூரி பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 5 வயது சிறுவன் கவின் சர்மா உயிரிழந்தார் இதில் கவலைக்கிடமான நிலையில் ரஜினி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இதனை தொடர்ந்து அங்கு திரண்ட பொதுமக்கள் தனியாருக்கு சொந்தமான இரண்டு கல்லூரி பேருந்தை அடித்து நொறுக்கினர்.

மேலும் இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி பதிவு வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து தனியார் பள்ளி வாகனங்கள் மற்றும் தனியார் கல்லூரி பேருந்துகள் வேகமாகவே செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இரண்டு பேருந்துகளும் பறிமுதல் செய்து தற்பொழுது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 504

0

0