நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து : 5 வயது சிறுமி பரிதாப பலி… உறவினர்கள் சாலை மறியல்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 June 2022, 2:11 pm
Child Dead Protest - Updatenews360
Quick Share

விழுப்புரம் : நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இருவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில் 5 வயது சிறுமி உயிரிழந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அடுத்த காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தர்ஷன மூர்த்தி மகள் இளம்பெண் ஈஸ்வரி (18 வயது). தனது உறவினர் ராமமூர்த்தி (சித்தப்பா) மகளான 5 வயது சிறுமி கவி நிலா ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் இருவேல்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவமனைக்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் ஈஸ்வரி மற்றும் கவிநிலா ஆகிய இருவரும் சாலையை கடந்தனர்.

அப்பொழுது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அதிவேகமாக வந்த கார் ஒன்று இவர்கள் இருசக்கர வாகனத்தில் மோதி தூக்கி வீசப்பட்டதில் சம்பவ இடத்திலேயே சிறுமி கவிநிலவு உயிரிழந்தார்.

தலையில் பலத்த காயத்துடன் இளம்பெண் ஈஸ்வரி ரத்தவெள்ளத்தில் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். உடனடியாக இடித்த காரை விட்டு ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.


உடனடியாக தகவல் அறிந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இருவேல்பட்டு பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் எனவும் விபத்தை தவிர்க்கும் வண்ணம் அப்பகுதியில் உயர்மின் விளக்கு அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த திருவெண்ணநல்லூர் போலீசார் மற்றும் விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீ நாதா மறியலில் ஈடுபட்ட சிறுமியின் உறவினர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.

இதனால் நீண்ட நீண்ட தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதில் 2 மணி நேரம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Views: - 401

0

0