திருச்சி அருகே பயங்கர ஆயுதங்களை காட்டி ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்திய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, மைப்பாறை கிராமத்தைச் சேர்ந்த முப்புட்டாதி என்பவரது மகன் காளிராஜ் (24). தனது நண்பரின் தம்பி கவிமணி என்பவர் வாகன விபத்தில் காயம்பட்டு, திருச்சி மாவட்டம், இருங்களுரில் உள்ள SRM மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவரை பார்த்துவிட்டு, தனது வீட்டிற்கு செல்வதற்காக SRM பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபர், தனது பெயர் வசந்த் என்றும், காளிராஜிடம் நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என கேட்டதற்கு திருச்சிக்கு செல்ல வேண்டும் என கூறவே, அவரிடம் உதவி செய்கிறேன் எனக்கூறி, மேற்படி வசந்த் அவரது வாகனத்தில் காளிராஜை ஏற்றிக்கொண்டு திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
செல்லும் வழியில் தனது வீட்டிற்கு சென்றவுடன் திரும்பி வந்து விடலாம் என கூறி இருங்களுர் குடிசை மாற்று வாரியத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு கதவை மூடி தாழ்ப்பாள் போட்டுள்ளார். அப்போது, அங்கு மது, கஞ்சா போதையில் பயங்கர ஆயுதங்களுடன் இருந்த கவியரசன், யுவராஜ், ரவி போஸ்கோ மற்றும் அய்யனார் ஆகியோர்களை வசந்த் அறிமுகப்படுத்தியதாக தெரிய வருகிறது.
சிறிது நேரத்தில், மேற்படி எதிரிகள் அனைவரும், தங்களுடன் இயற்கைக்கு மாறாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுமாறு காளிராஜ்-ஐ வற்புறுத்தியுள்ளனர். ஆனால், காளிராஜ் மறுத்துள்ளார். ஆனால், எதிரிகள் அதனை பொருட்படுத்தாமல், பயங்கர ஆயுதங்களைக் காட்டி மிரட்டியும், அவரை வலுக்கட்டாயமாக தாக்கியும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தியுள்ளனர்.
அதன் பின்னர், காளிராஜிடம் அவரது சாதி குறித்து விசாரித்து, அவரது ஜாதிப் பெயரைக் கூறி இழிவான வார்த்தைகளால் திட்டி, பயங்கர ஆயுதங்களை காட்டி காளிராஜிடம் இருந்த செல்போன், மற்றும் ரூபாய் 1100. ஆகியவற்றினை பறித்துக்கொண்டனர். இந்நிலையில் மேற்படி காளிராஜ், எதிரிகளிடம் தன்னை விட்டுவிடுமாறு கெஞ்சி அழுதபோது, இங்கு நடத்த சம்பவங்களை வெளியே கூறினால், உன்னை காலி செய்து விடுவோம் எனக்கூறி, வசந்த் தனது இரு சக்கர வாகனத்தில் திருச்சி மெயின் ரோட்டில் கொண்டு வந்து இறக்கி விட்டுவிட்டு சென்று விட்டார்.
இந்நிலையில், மேற்படி காளிராஜ் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்று டீக்கடைகாரரிடம் போன் வாங்கி திருச்சி மாவட்ட காவல் உதவி எண்ணுக்கு போன் செய்து நடந்த சம்பவத்தினை கூறிவிட்டு, மேற்படி எதிரிகள் தாக்கியதன் காரணமாக தனக்கு ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற திருச்சி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக காளிராஜிடம் சமயபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 5 வாலிபர்களையும் உடனடியாக கைது செய்தனர். தொடர்ந்து சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.