யப்பா…என்ன வேகம்…60 நொடிகளில் 51 ஸ்பெஷலிஸ்ட் பெயர்கள்: அசத்தும் 5 வயது சிறுமி..!!

16 July 2021, 4:16 pm
Quick Share

திருவள்ளூர் மாவட்டத்தில் 5 வயது சிறுமி ஒருவர் 1 நிமிடத்தில் 51 சிறப்பு மருத்துவர்களின் பெயர்களையும், மருத்துவ உபகரணங்களின் பெயர்களையும் கூறி அசத்தியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சியை சேர்ந்த பத்மநாபன்-லாவண்யா தம்பதியரின் மகள் நேஹா பத்மநாபன். இவர் கலாம்’ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறறார். 1 நிமிடத்தில் 51 சிறப்பு மருத்துவர்களின் பெயர்களை கூறி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

மேலும் மருத்துவ உபகரணங்களின் பெயர்களும், 1.22 நொடியில் மரங்களின் அறிவியல் பெயர்களை சொல்லி கலாம்’ஸ் உலக சாதனை விருது பெற்றுள்ளார்.

Views: - 114

0

0