டீக்கடை பெஞ்ச் : அரசியல் பேசும் இடம் கூடியது.. தேநீர் கடையில் 50% வாடிக்கையாளர் இன்று முதல் அனுமதி!!

5 July 2021, 8:38 am
Tea Shop - Updatenews360
Quick Share

இன்று முதல் ஜூலை 12 வரை தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், தேநீர் கடைகளில் 50% வாடிக்கையாளர்களுடன் தேநீர் அருந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், தமிழக அரசு கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் காரணமாக தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.

இதனையடுத்து தற்போது தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஒரே வகையான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று முதல் வருகிற 12-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேநீர் கடைகளை திறப்பதற்கு ஏற்கனவே அனுமதி கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது 50% வாடிக்கையாளர்கள் கடைகளில் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

Views: - 86

0

0