மீன் மார்க்கெட்டுக்கு வந்த 50-கிலோ ராட்சத பாறை மீன்..!!

By: Poorni
5 October 2020, 10:33 am
Quick Share

கோவை:கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டுக்கு வந்த 50 கிலோ ஒரு ராட்சத பாறை மீன் பொது மக்கள் கண்டு வியந்தனர்.

தூத்துக்குடியில் இருந்து நேற்று கோவை மொத்த மீன் மார்க்கெட்டுக்கு மீன் ஏற்றிய லோடு வந்தது. அதில் 50 கிலோ எடை கொண்ட ராட்சத பாறை மேல் இருந்தது.

அதனை உக்கடம் சில்லறை மீன் வியாபாரி சுபேர் என்பவர் வாங்கினார்.பெரும்பாலும் பாரை மீன்கள் 2 கிலோ முதல் 10 கிலோ வரை மார்க்கெட்டுக்கு வரும் ஆனால் 50 கிலோ எடை கொண்ட பாறை மீன் வருவது அரியது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதனை வாங்கிய சில்லறை வியாபாரி சுபேர் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார் இதனை மீன் பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர் மேலும் ஓட்டல் உரிமையாளர்களுக்கும் மீன் இறைச்சியை வாங்கி சென்றனர்.

Views: - 46

0

0