வங்கி கணக்குக்கு வந்த ₹50 லட்சம் : கணக்கை முடக்கியதால் ஓய்வு பெற்ற ஆசிரியை அதிர்ச்சி!!

19 July 2021, 3:14 pm
Bank Account Closed- Updatenews360
Quick Share

திருப்பூர் : ஓய்வு பெற்ற ஆசிரியரின் ஸ்டேட் பேங்க் வங்கி கணக்கு திடீர் முடக்கப்பட்டதால் நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் லட்சுமி . இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது ஓய்வூதிய பணத்தை, அவினாசியிலுள்ள ஸ்டேட் பேங்க் வங்கி கணக்கிலிருந்து எடுத்து வருகிறார்.
இந்த சூழ்நிலையில் கடந்த மே மாதம் தனது ஓய்வூதிய பணத்தை எடுக்க சென்றபோது, வங்கி கணக்கு சைபர் கிரைம் காவல்துறை பரிந்துரையின்படி முடக்கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது .

இதனால் பணம் எடுக்க முடியாத காரணத்தால் வங்கி மேலாளரிடம் விவரம் கேட்டுள்ளார். லட்சுமியின் வங்கி கணக்கில் 50 லட்ச ரூபாய் வந்திருப்பதால் சந்தேகத்தின் அடிப்படையில் முடக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த பணம் எங்கிருந்து வந்தது என வங்கி நிர்வாகத்திற்கு தெரியவில்லை எனவும் பதில் அளித்துள்ளார் .

இதனை தொடர்ந்து, வங்கி கணக்கு புத்தகத்தில் பதிவு செய்யும் போது 50 லட்ச ரூபாய் காட்டவில்லை எனவும், வங்கி நிர்வாகம் சார்பில் தங்களுக்கு முழுமையான தகவல்கள் தெரிவிக்கவில்லை எனவும், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓய்வூதிய தொகையையும் எடுக்க முடியாத சூழ்நிலை நிலவுவதால், உடனடியாக இதன் மீது விசாரணை மேற்கொண்டு வங்கி கணக்கை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஆசிரியர் லட்சுமி மற்றும் அவரது கணவர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் இன்று நேரில் மனு அளித்தனர் .

இது குறித்து ஏற்கனவே முதலமைச்சரின் தனிப் பிரிவு மனு அளித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Views: - 262

0

0