கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 50 ஆயிரம் நிதியுதவி: தமிழக அரசு!!

Author: Udhayakumar Raman
6 December 2021, 10:45 pm
TN Assemble 02 updatenews360
Quick Share

சென்னை; கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உச்சநீதிமன்ற உத்தரவுபடி தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. 50 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.இந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையில், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும். மாநில பேரிடர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே நிவாரணம் பெற்றவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. கொரோனாவால் பெற்றோர்களை இழந்து ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம் நிவாரணம் பெற்றவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தாது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 135

0

0